அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்டுங்க: மோடிக்கு பாஜக தலைவர் கடிதம்
அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.
இந்தியாஅயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்டுங்க: மோடிக்கு பாஜக தலைவர் கடிதம்
அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.
புது தில்லி: அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று பாஜக இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டது. இதையடுத்து ராமர் கோயில் கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை பாஜக மீண்டும் உத்வேகத்துடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அயோத்தியில் அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் ராம சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதற்கான பணிகளைத் துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.