முகப்பு
இந்தியா

கிரிக்கெட் சூதாட்டம்: இருவர் கைது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:19 AM
பகிர்:

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சூழலில், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவது தொடர்பாக ஆங்காங்கே தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஹைதராபாத் வடக்குப் பகுதி ஆணையரின் சிறப்பு அதிரடிப் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது நாராயணகுண்டா பகுதியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 1,73,000 ரொக்கப் பணம் மற்றும் 4 மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.