இந்தியா

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்: ஜேட்லி கிண்டல் 

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

IANS

புது தில்லி: பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வியாழனன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இதர தலைவர்கள் தொடர்ந்து கிளப்பிக் கொண்டிருப்பதன் காரணம், தேசிய பாதுகாப்புக்கு எதிராக அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருவது குறித்து மக்கள் கவனம் செல்லாமல் தடுப்பதற்காகத்தான்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களின் காரணமாக அக்கட்சி ஒரு கஷ்டமான சூழலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கிறது. ஆனால் உள்நாட்டில் அவர்களது பேச்சு குறித்து  பெரும் வெறுப்புணர்வுதான் நிலவுகிறது.

ரபேல் விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய  அரசு தொடர்ந்து தனது நிலையை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.  உச்ச நீதிமன்றமும் அதுகுறித்து பேசி விட்டது. தலைமைக் கணக்காயர் அலுலகமும் இதனை ஆய்வு செய்துள்ளது.

ஆனால் தற்போது மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT