இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கப் போகும் கமலின் கதாநாயகி 

IANS

மும்பை: விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மும்பையில் காங்கிரஸ் சார்பாக கமலின் கதாநாயகி ஒருவர் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாஜக ஆட்சியில் இருக்கும் மும்பையில் உள்ள ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு, மஹாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள இதர  17 தொகுதிகளுடன் சேர்ந்து வரும் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று நான்காவது கட்ட த்தில்  தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள தொகுதியொன்றில் காங்கிரஸ் சார்பாக கமலின் கதாநாயகி ஒருவர் களமிறங்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது.       

மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் பிரபல பாலிவுட நடிகையான ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் சார்பாக களமிறங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் ஊர்மிளாவின் குடும்பம் ஆகிய தரப் புகளை த் தொடர்பு கொண்ட போது இருந்து கருத்துகள் எதுவும் கூறப்படவில்லை.

ஆனால் ஊர்மிளா மடோன்கரின் பெயர் இறுதிக் கட்டப் பரிசீலனையில் இருப்பதாகவும், மிக விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1980-ஆம் ஆண்டு 'ஜாகோல்' என்னும் மராத்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஊர்மிளா, பின்னர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார். 1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான கமலின் 'இந்தியன்'  திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT