இந்தியா

துரியோதனன் அல்ல; மோடி ஒரு காட்டுமிராண்டி: லாலு மனைவி விமர்சனம் 

துரியோதனன் அல்ல; மோடி ஒரு காட்டுமிராண்டி என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

IANS

பாட்னா: துரியோதனன் அல்ல; மோடி ஒரு காட்டுமிராண்டி என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஹரியாணாவின் ஹிசார் நகரில் செவ்வாயன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி தனது பேச்சில், 'பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையையும் கிடைக்கவிவ்ல்லை என்பதால் என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார்கள். இந்தியாவில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்பு என்பதே  கிடையாது.

வரலாறு நமக்கு வழங்கும்  ஆதாரமும் இதுதான், மகாபாரதத்தை நாம் ஆதாரமாக கொள்ளலாம். துரியோதனனிடமும் இருந்த அகங்காரம்தான் தற்போது பிரதமர் மோடியிடமும் உள்ளது. பகவான் கிருஷ்ணர் துரியோதனிடம் சமரசம் பேச முயற்சி செய்தபோது, அவன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்க முயற்சித்தான். அதுவே அவனது வீழ்ச்சிக்கு அடிகோலியது.' என்று தெரிவித்தார். 

இந்நிலையில் துரியோதனன் அல்ல;  மோடி ஒரு காட்டுமிராண்டி என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

புதன் கிழமையன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராப்ரி தேவி  கலந்து கொண்டு பேசினார். அப்போதுஅவர் பேசியதாவது:

மோடியை துரியோதனன் என்று அழித்து பிரியங்கா தவறு செய்து விட்டார். அவர் மோடியை கொலைகாரர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும். அவர்தான் நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை கொல்லவும், கடத்தவும் காரணமாக அமைந்துள்ளார்.  இத்தகைய ஒரு மனிதன் காட்டுமிராண்டி மனநிலை கொண்டவராகத்தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT