இந்தியா

தேர்தல் வந்தவுடன் 'பூணூல்' அணிந்துகொள்வார் ராகுல்: ஸ்மிருதி இராணி

போருக்கு பயந்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி சரமாரியாகத் தாக்கினார். 

ANI

போருக்கு பயந்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டுக்காக உழைப்பவர். அதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவரை தறக்குறைவாக விமர்சித்து வருகின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், பூணூல் அணிந்துகொள்வார்.

அதுவரை அந்த 5 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வந்து பூணூல் அணிந்துகொண்டு, கங்கைக்கு சென்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துவார். 

அவரது சகோதரி பிரியங்கா வதேரா, வாக்கு வங்கிக்காக மட்டுமே அயோத்தி செல்வார், ஆனால் ராமருக்கு தலைவணங்கி வழிபாடு நடத்த மாட்டார். 

சொந்த கட்சியினர் கேட்டுக்கொண்டும், போர் என்றவுடன் பயத்தில் வாராணசி மற்றும் அமேதி தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, ராகுல் அமேதி சென்று பதுங்கிக்கொண்டார். அவரது சகோதரி பிரியங்கா தேர்தலில் போட்டியிடவே மறுத்துவிட்டார் என்று விளாசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT