நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த ராட்சத முதலை; அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!(விடியோ)
குஜராத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் நள்ளிரவில் முதலை ஒன்று புகுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் நள்ளிரவில் முதலை ஒன்று புகுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் மகேந்திர பாதியார் என்பவர் இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பூனையாக இருக்கும் என்று அவர் எழுந்து பார்த்த போது, குளியலறையில் முதலை ஒன்று இருந்துள்ளது. அதைபார்த்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வனவிலங்கு மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்து முதலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் முதலையை மீட்டனர். வீட்டின் குளியலறைக்குள் அவ்வளவு பெரிய முதலை எப்படி வந்தது? என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குளியலறைப் பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால் முதலையை பிடிக்க சற்று கடினமாக இருந்தது என்று வனவிலங்கு மீட்பு அறக்கட்டளையைச் சேர்ந்த கிருஷ்ண கயக்வாட் மற்றும் மணிஷ் பிஸ்ட் ஆகியோர் தெரிவித்தனர். வனவிலங்கு மீட்பு பணியாளர்கள் முதலையை மீட்கும் இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.