இந்தியா

சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநருடன் நாளை சந்திப்பு

ஆட்சி அமைப்பதற்கு தேவையான அளவுக்கு எம்எல்ஏக்கள் தங்களிடம் உள்ளதை உறுதிப்படுத்த போதிய கால அவகாசம் அளிக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி மறுத்துவிட்டார்.

DIN

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து குழப்பமும், இழுபறியான சூழ்நிலையும் நீடித்து வந்த நிலையில் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அளித்த அறிக்கையைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவை, இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை அனுப்பியது. 

அதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட அவர், அரசமைப்புச் சட்டத்தின் 356(1) பிரிவின்படி மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும் பிரகடனத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். அந்த மாநில சட்டப்பேரவை தற்காலிகமாக முடக்கி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான அளவுக்கு எம்எல்ஏக்கள் தங்களிடம் உள்ளதை உறுதிப்படுத்த போதிய கால அவகாசம் அளிக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி மறுத்துவிட்டார் என்று குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் சிவசேனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சனிக்கிழமை சந்திக்க முடிவு செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், ஆட்சியமைக்க மூன்று கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக? -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

SCROLL FOR NEXT