இந்தியா

மகாத்மா காந்திக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு!

மகாத்மா காந்திக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது மத்தியப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Muthumari

மகாத்மா காந்திக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது மத்தியப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து குவாலியர் நகரம் இந்து மகாசபா நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மையமாக இருந்து வருகிறது. மேலும், குவாலியரில் உள்ள இந்து மகாசபா ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோட்சேவை வணங்கி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு குவாலியரில் அவரது சிலையை நிறுவ முயன்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்த சிலையைக் கைப்பற்றி சிலை நிறுவுவதற்கு தடை விதித்தது. 

இந்நிலையில், நாதுராம் கோட்சேவின் '70 வது தியாக நாளில்' அவரது செயற்பாட்டாளர்கள் கோட்ஸேவை வணங்கியதோடு, மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதையடுத்து, மத்தியப்பிரதேச காவல்துறையினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் ஆர்வலர் ரவீந்திர சௌஹான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துண்டு பிரசுரங்களை விநியோகித்த நபர்களை கைது செய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT