பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் 
இந்தியா

சீன அதிபருக்காக சென்னையில் வந்திறங்கிய சொகுசு கார்கள்!

இந்தியா வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பயணத்துக்காக 4 சொகுசு கார்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கியுள்ளன.

DIN


இந்தியா வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பயணத்துக்காக 4 சொகுசு கார்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கியுள்ளன.

சீனாவில் இருந்து, அதிபர் ஷி ஜின்பிங்கின் தேவைக்காக 4 சொகுசு கார்கள், கார்கோ மற்றும் அவரது உடைமைகள் என ஒரு சிறப்பு விமானம் முழுக்க பொருட்கள் சென்னை வந்தடைந்துள்ளது.

சென்னையில் அக்டோபர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சீன அதிபர் தங்கியிருந்து, பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சென்னை வந்திறங்கிய சொகுசு கார்கள் இன்று பிற்பகலில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு, அதிபரின் பயணத்துக்கு தயார் செய்யப்பட உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இம் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச உள்ளனா். மேலும் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள பழைமைவாய்ந்த பல்லவா் கால சிற்பங்களையும், கடற்கரை கோயிலையும் சுற்றி பார்க்க உள்ளனா். இதையடுத்து மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தனியாா் பேருந்து மோதி பெட்ரோல் பம்ப் மேலாளா் பலி

விதிமீறல்: 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT