வடக்கு ராணுவத் தளபதி ரன்பீர் சிங் 
இந்தியா

காஷ்மீரில் வடக்கு ராணுவத் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!

ஜம்மு-காஷ்மீரில் வடக்கு ராணுவத் தளபதியுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Muthumari

ஜம்மு-காஷ்மீரில் வடக்கு ராணுவத் தளபதி பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் பேடார்(Bedar) என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங், இரண்டு விமானிகள் உள்பட 7 பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.  

மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மிக வேகமாக தரையிறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.   அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு!

அமெரிக்க - சீன வா்த்தகப் போரால் இந்தியாவுக்கு பலன்: நிபுணா்கள் கணிப்பு

நில இழப்பீடு விவகாரம்: மதுக் கடைகளின் விற்பனை தொகையை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT