இந்தியா

வேட்பு மனுவில் தவறான தகவல்: முன்னாள் முதல்வரின் மகன் கைது 

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்த புகாரின் கீழ் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்.

DIN

ராய்ப்பூர் தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்த புகாரின் கீழ் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 2000 ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் 2003 வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தவர் காங்கிரசைச் சேர்ந்த அஜித் ஜோகி. கடந்த 2016-ல் இவர் காங்கிரசை விட்டு விலகி,  ‘ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது மகன் அமித் ஜோகி.

இந்நிலையில் தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்த புகாரின் கீழ் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மர்வாகி தொகுதியில் போட்டியிட்ட அமித் ஜோகி, வேட்பு மனுவில் தனது பிறந்த ஊர் தொடர்பாக தவறான தகவலை அளித்ததாக அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சமீரா பைக்ரா என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது கடந்த ஆறுமாத காலமாக விசாரணை நடத்தி வந்த போலீசார், செவ்வாயன்று அமித் ஜோகியை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT