இந்தியா

திகார் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்கப் போகிறார் சிதம்பரம்

PTI

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை திகார் சிறையில் தனியறையில் வைக்க சிபிஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்று சிதம்பரம் தரப்பில் மிகவும் தாழ்மையுடன் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் சிதம்பரம் சுமார் 15 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, திகார் சிறையில் அடையுங்கள் என்று சிபிஐ தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிபதி ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து திகார் சிறைக்கு சிதம்பரத்தைக் கொண்டு செல்வதற்கான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், சிபிஐ காவல் முடிந்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரம் இன்று சிறைக்குச் செல்கிறாரா? அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் சிபிஐ காவல் நீட்டிப்பு முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிதம்பரம். அப்போது, ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டும். வெளியில் விட்டால் அவர் ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுங்கள் என்று கோரி சிபிஐ கோரிக்கை மனு தாக்கல் செய்தது.

ஆனால் திகார் சிறையில் அடைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத் துறையிடம் சரணடைய தயார் என்று சிதம்பரம் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.

அதாவது, அமலாக்கத் துறையில் சரணடைய நான் தயாராக இருக்கிறேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் நான் எதை அழிக்க முடியும். ஆதாரத்தை அழித்துவிடுவேன் என்ற சிபிஐயின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், தன்னை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டாம் என்று மிகத் தாழ்மையுடனும் சிதம்பரம் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஆனால் சிதம்பரத்தின் வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த சிபிஐ சிறப்பு நீதிபதி, சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிபிஐ-க்கு எதிராக சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT