தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் நாட்டில் உள்ள ஆளுநர்களில் இளவயது ஆளுநர் என்ற பெருமையை தெலங்கானா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை செளந்தரராஜன் (58) பெற்றுள்ளார்.
வயதில் மூத்த ஆளுநர் என்ற பெருமையை ஆந்திர ஆளுநர் விஷ்வ பூஷண் ஹரிசந்தன் (85) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த மூத்த ஆளுநராக மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (84) உள்ளார். இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.