கேரளாவில் உள்ள மதுபானக் கடை 
இந்தியா

கேரளாவில் ஓணத்திற்கு சரக்கு விற்பனை எவ்வளவு தெரியுமா? டாஸ்மாக்கிற்கு 'டஃப் பைட்'! 

கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானக் கடைகளில் விற்பனையான மதுவகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

IANS

திருவனந்தபுரம் கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானக் கடைகளில் விற்பனையான மதுவகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மாநில அரசின் கீழ் செயல்படும் 'கேரள மாநில மதுபானங்கள் ஆணையம்' மூலமாக மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை நடைபெறுகிறது. 

அதேபோல் அங்கு ஓணம் என்பது பல்வேறு மதங்கள் மற்றும் இனக்குழுவினரால் கொண்டாடப்படும் ஓர் அறுவடைத் திருவிழாவாகும். செப்டம்பர் 10-ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட ஓணத்தை முன்னிட்டு செப்டம்பர் 3 முதல் 10 வரையிலான எட்டு நாட்களில் அங்கு மதுபான விற்பனை அமோகமாக இருந்தது.

இந்நிலையில் கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானக் கடைகளில் விற்பனையான மதுவகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எட்டு நாட்களில் கேரளா முழுமைக்கும் சேர்த்து ரூ. 487 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.457 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல திரிச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் உள்ள கடை ஒன்றில் அதிகபட்சமாக ரூ. 1.44 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த வருடம் இது ரூ. 1.22 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT