மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:35 PM
மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், கட்லபுரா கட் பகுதியில் விநாயகர் சிலை கரைக்கும் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகாலை 4.30 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Advertisement
image courtesy ANI