இந்தியா

46 நாட்களுக்கு பின்னர் செயல்படும் மெஹபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கு: இயக்குவது யார் தெரியுமா? 

Muthumari

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கு 46 நாட்களுக்கு பின்னர் இயங்கத் தொடங்கியுள்ளது. அவரது மகள் இல்திஜா இந்த ட்விட்டர் கணக்கை இயக்குவதாகத் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, பாதுகாப்பு கருதி காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்திக்க பல நேரங்களில் முயற்சித்து முடியாத காரணத்தினால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  தனது தாயாரை சந்தித்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. எனவே, உடனடியாக ஸ்ரீநகருக்குச் சென்று அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று இல்திஜா தனது மனுவில் கூறியிருந்தார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்த இந்த வழக்கில் இல்திஜா, தாயார் முப்தியை சந்திக்க அனுமதி வழங்கியது. கடந்த வாரம், பலத்த பாதுகாப்புக்கு இடையே, மெஹபூபா முப்தியை சந்தித்து பேசினார் இல்திஜா.

இதைத்தொடர்ந்து, 46 நாட்களுக்கு பின்னர்  மெஹபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கு செயல்படத் தொடங்கியுள்ளது. அவரது மகள் இல்திஜா இந்த ட்விட்டர் கணக்கை இயக்குவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் வெளியிட்டுள்ள தகவலில், 'காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித தகவல் தொடர்பு சேவையும் கிடைக்கவில்லை. ஏன், தினசரி செய்தித்தாள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் அவர் தொடர்ந்து முப்தியின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT