முகப்பு
இந்தியா

விமானப் பயணத் தடை நீக்கம் எப்போது? மத்திய அமைச்சர் பதில்

கரோனா ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானப் பயணத் தடை நீக்கம் எப்போது என்பது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Updated On : 8 ஏப்ரல், 2020 at 4:10 PM
ஹர்தீப் சிங் புரி
பகிர்:

புது தில்லி: கரோனா ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானப் பயணத் தடை நீக்கம் எப்போது என்பது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 5360 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 164 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் கரோனா ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானப் பயணத் தடை நீக்கம் எப்போது? என்பது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மதிய அரசு அறிவித்துள்ள கரோனா ஊரடங்கின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தடையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக வருந்துகிறேன்.

கரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாட்டு மக்களுக்கு இதன்மூலம் ஆபத்தில்லை என்று மத்திய அரசு உறுதி செய்த பிறகு விமானப் பயணத் தடை நீக்கம் செய்யப்படும்.

இதுபோன்ற ஒரு சோதனைக் காலத்திள் ஒத்துழைப்பு தரும் அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை வெல்லுவதோடு வலிமையாக வெளிவருவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.