முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை இரவு அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். புதன்கிழமை அதிகாலை பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், பாதுகாப்புப் படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 

சிறிது நேரம் நீடித்த இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments