முகப்பு
இந்தியா

தில்லி உயிரியல் பூங்காவில் புலி மரணம்

தில்லி உயிரியல் பூங்காவில் 14 வயதுடைய பெண் புலி ஒன்று இறந்தது. 

இந்தியா

தில்லி உயிரியல் பூங்காவில் புலி மரணம்

தில்லி உயிரியல் பூங்காவில் 14 வயதுடைய பெண் புலி ஒன்று இறந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

தில்லி உயிரியல் பூங்காவில் 14 வயதுடைய பெண் புலி ஒன்று இறந்தது. 

தில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் கல்பானா என்கிற பெண் புலி ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. 14 வயதுடைய அந்த புலி சிறுநீரக கோளாறு காரணமாக சில காலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் புலி நேற்று இறந்தது. 

இதையடுத்து புலியின் மாதிரிகளை எடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். கரோனா பரவல் இருந்ததா என்பது குறித்த ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் கடந்த 5ஆம் தேதி 4 வயதான நாடியா என்ற பெண் புலிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →