இப்படியும் பாடம் நடத்தலாம் என்பதை வெளிப்படுத்தும் மேற்கு வங்க ஆசிரியர்
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் ஒருவர் நெட்வொர்க் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக மரத்தில் பணியிடத்தை அமைத்து வகுப்புகளை நடத்தி வருகிறார்.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் ஒருவர் நெட்வொர்க் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக மரத்தில் பணியிடத்தை அமைத்து வகுப்புகளை நடத்தி வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சுப்ரதோ பாடி. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால், இவர் இணையதளத்தின் ஊடாக வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இணையளத்தின் மூலம் வகுப்புகளை நடத்துவதால், அடிக்கடி நெட்வொர்க் பிரச்னைகளால் இடையூறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனக்கான பணியிடத்தை அவர் மரத்தில் அமைத்துக்கொண்டார்.
இதுபற்றி அவர் பேசுகையில், "எங்கள் கிராமத்தில் எல்லா இடங்களிலும் எங்களுக்கு சிக்னல் கிடைக்காது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நான் பல்வேறு வகுப்புகளை நடத்துவேன்" என்றார்.
இந்த வித்தயாசமான அமைப்புமுறை, இணையதளத்தின் ஊடாக எவ்வித இடையூறுமின்றி வகுப்பு எடுக்க முடிவதை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.