இந்தியா

விசாகப்பட்டினத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி

ANI

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பலி அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கப்பல் கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து, அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 10 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், அந்த கிரேன் புதிதாகக் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை பொறுத்தும் போது விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT