இந்தியா

கேரளத்தில் கனமழைக்கு வாய்ப்பு : 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை  

DIN

வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானியல் மையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் வரும் வாரம் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி மாநிலத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற மழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

நெமலி, இடுக்கி, கோழிக்கோடு, காசர்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி ஏற்கெனவே திங்கள்கிழமை வரை ஆரஞ்சு நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோட், மலப்புரம், பாலக்கோடு, திருச்சூர், இடுக்கி, கோட்டையம் பகுதிகளில் 6 செ.மீ வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், திருச்சூர், இடுக்கி மாவட்டங்களில் ஆகஸ்ட் 6 வரை ஆர்ஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை எர்ணாகுளம் கோட்டயம்-கயம்குளம் பிரிவில் உள்ள கோட்டயம் மற்றும் சிங்கவனம் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பாதையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT