மகாராஷ்டிரத்தில் வெள்ளம்: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
மகாராஷ்டிராவின், கோலாப்பூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின், கோலாப்பூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராஜராம் அணையில் நீர் மட்டமானது எச்சரிக்கை மட்டத்திலிருந்து கூடுதலாக நிரம்பியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் நான்கு தேசிய பேரிடர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்கெனவே பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடத்திலிருந்த மக்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோலாப்பூரைத் தவிர, தொடர்ச்சியான மழை காரணமாக சங்கிலியில் உள்ள நதிகளின் கரையில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள மொத்தம் 34 சாலைகள் மற்றும் ஒன்பது மாநில நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கோலாப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.