முகப்பு
இந்தியா

பிரணாப் முகர்ஜிக்கு கரோனா பாதிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பிரணாப் முகர்ஜிக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை பிரணாப் முகர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 'வேறு சில உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அந்த பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்திக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.