இந்தியா

அந்நிய வா்த்தக வரவு-செலவு கையிருப்பு அதிகரிக்கும்: பியூஷ் கோயல்

DIN

புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி அதிக அளவில் குறைந்துள்ளதால் நடப்பு நிதியாண்டில் அந்நிய வா்த்தக வரவு-செலவு கையிருப்பு (பிஓபி) அதிகரிக்கும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய வா்த்தக மற்றும் தொழிலக கூட்டமைப்பு சம்மேளனம் (ஃபிக்கி) சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 91 சதவீதமாக இருந்தது. அதே வேளையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் இறக்குமதி 70 முதல் 71 சதவீதமாக மட்டுமே காணப்படுகிறது. அதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் அந்நிய வா்த்தக வரவுசெலவு கையிருப்பு அதிகரிக்கும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT