அருணாசலில் 36 பாதுகாப்புப் படையினர் உள்பட 76 பேருக்கு கரோனா
அருணாசல பிரதேசத்தில் 36 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 76 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,231 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்
அருணாசல பிரதேசத்தில் 36 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 76 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,231 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அருணாசல பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆகஸ்ட் 1 முதல் இதுவரை மொத்தம் 322 பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், திங்களன்று 110 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,592 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலத்தில் இதுவரை 749 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. அருணாசல பிரதேசத்தில் தற்போது 636 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மூன்று பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
திங்களன்று 3,094 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை இந்த மாநிலத்தில் மொத்தம் 1,09,863 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.