முகப்பு
இந்தியா

பிருந்தாவன் இஸ்கான் கோயில் மூடல்; அர்ச்சகர் உள்பட 22 பேருக்கு கரோனா

பிருந்தாவன் இஸ்கான் கோயில் அர்ச்சகர் உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு கோயில் மூடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பிருந்தாவன் இஸ்கான் கோயில் மூடல்; அர்ச்சகர் உள்பட 22 பேருக்கு கரோனா
பகிர்:

பிருந்தாவன் இஸ்கான் கோயில் அர்ச்சகர் உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு கோயில் மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மிகப்பெரிய கிருஷ்ணர் கோயிலான பிருந்தாவன் இஸ்கான் கோயில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயிலின் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் என 165 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இஸ்கான் தலைவர் பக்தி சாரு சுவாமி கடந்த ஜூலை மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றது. அந்த இறுதிச் சடங்கில், பிருந்தாவன் இஸ்கான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுத் திரும்பி 10 - 15 நாள்களே ஆகியிருக்கும் நிலையில், கோயிலின் அர்ச்சகர் உள்பட கோயிலில் பணியாற்றி வரும் 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை அடுத்து கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வளாகம் பூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.