முகப்பு
இந்தியா

பிரணாப் முகர்ஜி உடல்நிலை சற்று கவலைக்கிடம்: பிடிஐ தகவல்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

பிரணாப் முகர்ஜி உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகா்ஜிக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் இருக்கிறாா். 

அவரது உடல்நிலையை ராணுவ மருத்துவா்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா். முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையின்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் கூறின. இதையடுத்து அவர் தன்னோடு தொடா்பில் இருந்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி தனது சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா்.

இதைனிடையே பிரணாப் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. எனினும் இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வட்டாரத் தரப்பில் எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.