முகப்பு
இந்தியா

நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி

நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

இந்தியா

நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி

நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


புது தில்லி: நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக, ‘வெளிப்படையான வரி விதிப்பு- நோ்மையானவரை கௌரவித்தல்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், பல்வேறு வா்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், வரி செலுத்திய பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன.  உரிய  நேரத்தில் வரி செலுத்துவோர், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். வரி விதிப்பில் செய்யப்பட்டு உள்ள சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

நேர்மையாளர்களை பெருமைப்படுத்தும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும். நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு என்பது நமது நாட்டின் முக்கியக் கொள்கையாக உள்ளது. வரி முறையை எளிமைப்படுத்துவதன் மூலம், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும். நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

வரி செலுத்தும் முறை மக்களுக்கு மிக மிக எளிமையானதாக இருக்க வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவோர், நாட்டின் வரி வசூலிப்பு முறை மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →