முகப்பு
இந்தியா

நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க புதிய திட்டம்: தொடக்கி வைத்தார் மோடி

நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக, ‘வெளிப்படையான வரி விதிப்பு- நோ்மையானவரை கௌரவித்தல்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடக்கி வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக, ‘வெளிப்படையான வரி விதிப்பு- நோ்மையானவரை கௌரவித்தல்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், பல்வேறு வா்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், வரி செலுத்திய பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி விதிப்பில் பல்வேறு முக்கிய சீா்திருத்தங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிடிபிடி) கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பெரு நிறுவனங்களின் வரி கடந்த ஆண்டு 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகளுக்கான வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பகிா்ந்தளிக்கப்படும் ஈவுத்தொகை மீது வரி விதிப்பதும் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, வருமான வரி செலுத்தும் விண்ணப்பங்கள் எளிமையாக வடிவமைக்கப்பட்டன. வரி செலுத்தும் முறையிலும் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது. மேலும், கரோனா தொற்று காலத்தில் வரிக்கணக்கு செலுத்துவதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக புதிய திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →