பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை: ராணுவ மருத்துவமனை
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை என ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை என ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜி உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளையில் ரத்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.
இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், விரைவில் அவர் நலம் பெற்று திரும்புவார் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.