365 வழக்குகளில் உதவிய நாய்க்கு இறுதி மரியாதை செய்த காவல்துறையினர்
மகாராஷ்டிராவில் 365 வழக்குகளில் காவல்துறைக்கு உதவிய மோப்பநாய் ராக்கி மறைந்ததையடுத்து மும்பை காவல்துறையினர் அவற்றுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
மகாராஷ்டிராவில் 365 வழக்குகளில் காவல்துறைக்கு உதவிய மோப்பநாய் ராக்கி மறைந்ததையடுத்து மும்பை காவல்துறையினர் அவற்றுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களைத் தேடுவது, ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு சேவைகளுக்கு காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு உதவ சில நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநில காவல்துறையில் மோப்ப நாயாக பணியாற்றி வந்த நாய் ராக்கி. கிட்டத்தட்ட 365 வழக்குகளில் தடயங்களை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவியுள்ளது. இந்நிலையில் மும்பை காவல்துறையில் பணியாற்றிய ராக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. மும்பை காவல்துறையில் பல்வேறு வழக்குகளில் மோப்பநாயாக பணியாற்றிய ராக்கி காவலர்களின் நண்பனாகவும் பழகி வந்தது.
தொடர்ந்து ராக்கி மறைந்ததையடுத்து அதனை வளர்த்து வந்த காவலர்கள் சோகத்தில் மூழ்கினர். தொடர்ந்து ராக்கிக்கான இறுதி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு காவலர்களும் கலந்து கொண்டு ராக்கிக்கு அஞ்சலி செலுத்தினர்.