முகப்பு
இந்தியா

ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்ட கேரள நீர்ப் போக்குவரத்து படகுகள் 

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நீர்ப் போக்குவரத்துத் துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த படகுகள் அனைத்தும் கரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர உதவும் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழாவில் நீர்ப் போக்குவரத்துத் துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த படகுகள் அனைத்தும் கரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர உதவும் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன.

கரோனா பேரிடர் காலத்தில் நீர்ப் போக்குவரத்து வசதியாக இருக்கும் ஆலப்புழா போன்ற பகுதிகளில் கரோனா நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து வர வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் கரோனா நோயாளிகளை மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு வர இந்த சேவை பேருதவி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.