முகப்பு
இந்தியா

உ.பி. சுகாதாரத்துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கரோனா

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
UP Minister Atul Garg tests positive for COVID-19
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் டிவிட்டர் பதிவிட்டுள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பிசிஆர் சோதனை செய்தபோது கரோனா தொற்று இல்லை என்றும், நேற்றிரவு விரைவுப் பரிசோதனையான ரேபிட் டெஸ்ட் செய்தபோது தனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஞாயிறன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான சேதன் சௌகான், கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குருகிராமில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.