குஜராத் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
குஜராத்தின் ஜாம்நகர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தியாகுஜராத் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
குஜராத்தின் ஜாம்நகர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத்தின் ஜாம்நகர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் கரோனா அல்லாத ஐசியு வார்டில் பிற்பகல் 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார். தீ பற்றியது தெரிந்தவுடன் கட்டடத்தில் இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.