முகப்பு
இந்தியா

புல்வாமா தாக்குதல்: 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்?

​புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 13,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
​புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 13,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிர்:


புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 13,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வாகனம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ, 5-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.