முகப்பு
இந்தியா

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
ஜம்மு காஷ்மீர்
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் எல்லையையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. 

அந்த வகையில், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்பாட்டை மீறி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை 11.30 மணியளவில் திடீர் தாக்குதல் நடத்தியது. 

அதற்கு இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடித் தகவல் கிடைக்கவில்லை.
 

முழு கட்டுரையைப் படிக்க →