முகப்பு
இந்தியா

95.71 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 36,594 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 95,71,559 ஆக அதிகரித்துவிட்டது.

Updated On : 4 டிசம்பர், 2020 at 10:42 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM

புது தில்லி: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 36,594 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 95,71,559 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 42,916 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 90,16, 289 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 94.20 சதவீதமாகும். வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 540 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,39,188 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

Advertisement

நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்பவா்கள் எண்ணிக்கை 4,16,082 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 5 லட்சத்துக்கு குறைவாகவே உள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.35 சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இப்போது 95 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 3-ஆம் தேதி வரை 14,47,27,749 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வியாழக்கிழமை மட்டும் 11,70,102 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.