மீண்டும் தடுப்புக்காவல்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவருமான மெகபூபா முப்தி தான் மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவருமான மெகபூபா முப்தி தான் மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக செயல்பட்டவர் மெகபூபா முப்தி. மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதைத் தொடர்ந்து ஜம்முகாஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது.
பல தலைவர்களும் ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மெகபூபா 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வரும் அவர் தான் மீண்டும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“அரசின் மீதான எதிர்ப்புகளைத் தடுக்க தடுப்புக்காவல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்று மெகபூபா கூறினார்.
"எந்தவொரு கருத்தையும் கேட்காமல் ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையையும் துயரத்தையும் ஏற்படுத்த இந்திய அரசு விரும்புகிறது" என்று மெகபூபா தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.