விவசாயிகளுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது மத்திய அரசு
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 14-வது நாளை எட்டியிருக்கும் நிலையில், விவசாயிகளுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவிவசாயிகளுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது மத்திய அரசு
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 14-வது நாளை எட்டியிருக்கும் நிலையில், விவசாயிகளுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 14வது நாளை எட்டியிருக்கும் நிலையில், விவசாயிகளுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் நடத்தியப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 40 சதவீத விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை பங்கேற்கவிருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. 2020-இல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது; நிச்சயம் கரோனா இல்லை
பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள் 8 பேர் மற்றும் பல்வேறு தேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 13 பேர் நேற்றிரவு அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகம், தொழில் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முதலில் இந்த சந்திப்பு அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பூசா பகுதியில் நடைபெற்றது. அனைத்திந்திய இந்திய கிஸான் சபை பொதுச் செயலாளர் ஹன்னான் முல்லா, பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய கிஸான் சபை பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான ஹன்னான் முல்லா கூறுகையில், "புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார். எனினும், அச்சட்டங்களில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்களை புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எழுத்துமூலம் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுட்டுள்ள அனைத்து வேளாண் சங்கங்களுடன் இது தொடர்பாக ஆலோசித்துவிட்டு, மத்திய அரசுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வோம். புதிய வேளாண் சட்டங்களைத் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை' என்று கூறியிருந்த நிலையில், பேச்சுவார்த்தையை மத்திய அரசே ரத்து செய்துள்ளது.
தில்லி விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கப் போவதாக சில விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூறியிருந்தனர். அரசு மேற்கொள்ள முன்வந்துள்ள திருத்தங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று வேறு சில விவசாயிகள் சங்கத்தினர் கூறியிருந்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது தில்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் கடந்த 13 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. "புதிய சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்காகவே இயற்றப்பட்டன. அதனால், விவசாயிகள் அதிக பயனடைவார்கள்' என்று மத்திய அரசு கூறி வருகிறது.