முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று புதிதாக 4,470 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 4,470 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 10 டிசம்பர், 2020 at 7:51 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:35 PM

கேரளத்தில் இன்று புதிதாக 4,470 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், இன்று 52,769 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 4,470 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 59,517 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
கரோனாவுக்கு இன்று மேலும் 26 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 2,533ஆக உயர்ந்துள்ளது. இன்று 4,847 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,91,845ஆக உயர்ந்துள்ளது. 
3,16,491 கண்காணிப்பில் உள்ளனர். 441 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.