முகப்பு
இந்தியா

ரஷியாவில் புதிதாக 27,927 பேருக்கு கரோனா தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,927 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 10 டிசம்பர், 2020 at 4:21 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:35 PM

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,927 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

ரஷியாவில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 27,927 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 25,69,126 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 6,730 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 562 பேர் உள்பட இதுவரை 45,280 பேர்  கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 20,33,669 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 490,177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 500க்கும் அதிகமானோர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.