விவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும்: அகிலேஷ்
நாட்டிற்கே உணவளிக்கு விவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவிவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும்: அகிலேஷ்
நாட்டிற்கே உணவளிக்கு விவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டிற்கே உணவளிக்கு விவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆளும் பாஜக அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. நியாயமான கோரிக்கைகளுடன் சாலைகளில் போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக இதயமற்ற அணுகுமுறையை பாஜக மேற்கொள்கிறது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்திய ஜனநாயகத்தின் மீதான மதிப்பையே ஆளும் கட்சி சீர்குலைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கன்னூஜ் பகுதியில் கிஷான் யாத்திரையை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த திங்கள் கிழமை அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.