முகப்பு
இந்தியா

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்: ஹரியாணா துணை முதல்வர்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
துஷ்யந்த் சவுதலா
பகிர்:

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பாஜக கூட்டணியில் உள்ள ஜன்நாயக் ஜனதா கட்சியின் தலைவரும், ஹரியாணா துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார். 

'விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளுக்கான உறுதிகள் எழுத்துப்பூர்வ வடிவில் மத்திய அரசு வழங்கியுள்ளது. அது விவசாயிகளுக்கு கிடைக்காதபட்சத்தில் நான் எனைத்துப் பதவியை ராஜினாமா செய்வேன்' என்று அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, ஹரியாணாவில் பாஜக கூட்டணியில் உள்ள  ஜன்நாயக் ஜனதா கட்சியின் சில எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுமாறும் துஷ்யந்த் சவுதலாவுக்கு கட்சி எம்.எல்.ஏக்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய துஷ்யந்த் சவுதலா இந்த ஏறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை அளித்த நிலையில், அதனை நிராகரித்து விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →