இந்தியாவில் மேலும் 29,398 பேருக்கு கரோனா; 414 பேர் பலி
இந்தியாவில் இன்று புதிதாக 29,398 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று புதிதாக 29,398 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 29,398 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 97,96,770-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 414 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,42,186-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 37,528 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 92,90,834-ஆக அதிகரித்தது. நாட்டில் இப்போது 3,63,749 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 10-ஆம் தேதி வரை 15,16,32,223 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 8,72,497 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.