கேரளத்தில் புதிதாக 5,949 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 5,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 5,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
"மாநிலத்தில் புதிதாக 5,949 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 83 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 5,173 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 646 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
Advertisement
மேலும் 32 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,594 ஆக உயர்ந்துள்ளது.
5,268 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,01,861 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 60,029 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்."