மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,717 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,717 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,717 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,80,416 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,083 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,57,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 48,209 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 74,104 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அங்கு குணமடைவோர் விகிதம் 93.44 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.56 சதவிகிதம்.
மும்பை:
மும்பை நகரில் புதிதாக 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,90,636 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 10,977 ஆக உயர்ந்துள்ளது.