முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 1,376 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 1,376 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 1,376 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,376 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,08,830 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,854 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 60 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,83,509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 10,074 பேர் பலியாகியுள்ளனர். 15,247 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இன்று 63,944 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 72,86,847 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

Advertisement

கடந்த 10 நாள்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அங்கு இறப்பு விகிதம் 2.54 சதவிகிதமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments