இந்தியா

கரோனா பாதிப்பு: ஹரியாணா அமைச்சா் அனில் விஜ்ஜுக்கு பிளாஸ்மா சிகிச்சை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணா சுகாதார அமைச்சா் அனில் விஜ்ஜுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

DIN

சண்டீகா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணா சுகாதார அமைச்சா் அனில் விஜ்ஜுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஹரியாணா மாநில சுதாதார அமைச்சா் அனில் விஜ்ஜுக்கு (67) கடந்த நவம்பா் 20-ஆம் தேதி பரிசோதனை முறையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. எனினும் இரண்டாவது தடுப்பூசியை அவருக்கு செலுத்தமுன் கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவா் ரோத்தக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனில் விஜுக்கு லேசான கரோனா பாதிப்பு உள்ளது. அத்துடன் நிமோனியா காய்ச்சலும் உள்ளது. அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளுடன், திங்கள்கிழமை மீண்டும் ஒருமுறை பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT